Sunday, February 28, 2010

முதல் காதல் தோல்வி!

என்றாவது ஒரு நாள் நிகழ்ந்தே
தீரும் மரணமும் காதலும்,
நீயும் வந்தாய் என் வாழ்வில்.
உன்னை சந்தித்த அந்த தருணங்கள்,
எனக்குள் நீ ஏற்படுத்திய சலனங்கள்,
உனக்குள் நான் தொலைந்த பொழுதுகள்,
என்னை பரிதவிக்கவிட்ட உன் பார்வைகள்,
என் உயிரைக் குடித்த உன் சிரிப்புகள்...
இவை எல்லாமே கனவாய் போய் விடக்கூடாதா....
அளவில்லா அன்பினால் அஸ்திவாரமிட்டு
சின்ன சின்ன ஆசைகளால் நான்
கட்டிய அழகிய வீட்டை,
முழுதாய் கட்டி முடிக்கும் முன்பே,
நீ இடித்து தரைமட்டமாக்கிய அந்த நாள்...
கனவாகவே போய்விடட்டும்...
"இல்லை" எனற ஒற்றை வார்த்தையால்
என்னை சுக்கு நூறாக்கி
கதறி அழ வைத்த அந்த நாள்
கனவாகவே போய்விடட்டும்...
இருமனமும் ஒருமனமாகி
அன்பில் கலப்பதுதான் காதல்.
நமக்குள் இருந்தது 'காதல்' இல்லை...என்று
"நீ" சொன்னால் நான் மறுக்க இயலாது..
ஒருவேளை நாம் நண்பர்களாகவே இருந்திருப்போம்...
உன் பார்வைகள் என்னை ஊடுறுவாமல் இருந்திருந்தால்...
உன் ரகசிய புன்னகைகள் என்மேல் படராமல் இருந்திருந்தால்..
உன் ஒவ்வொரு பார்வைக்கும்
என்னுள் புது புது அர்த்தங்கள் கொண்டேன்.
உன் ஒவ்வொரு அசைவிலும்
உன்னை அறிய முயன்றேன்.. உன் மனம் அறியாமலே...
தவறு உன்னுடையதா..? என்னுடையதா..?
எங்கெ? எப்பொழுது?ஏன் நிகழ்ந்தது? எதுவாயினும்...
உன்னைபோல் எனக்கும்
"முதல் காதல்" தோல்வி...

மழை..!!!

உன் நினைவுகளின் மழையில் நனைகிறேன்...

உன் இமை குடை கொண்டு வா....

உன் இதழ்களால் என் வெட்கம் துடை....

உன் மூச்சின் வெப்பத்தில் எனை குளிர்காய விடு....

------
நிலமகள் பருவமடைந்ததால்...

வானம் நடத்தும் நீராட்டுவிழா.
-----
தார்ச்சாலையில் ஜலதரங்கம்,

மத்தளமாய் இடிமுழக்கம்,

வண்ணஒளிக்கீற்றாய் மின்னல்கள்,

இசைமழையில்

ஆனந்த கூத்தாடும்

தெருவோர மரக்கிளைகள்..
-----
மேகத்திற்கும் காதல் தோல்வியா...?


இடியாய் கதறி,

அடைமழையாய்...

அழுது தீர்க்கிறதே!!!!

Friday, February 26, 2010

தவிப்புடன் சில தருணங்கள்..

கிண்டலும்..,கேலியுமாய்..,
நம் பேச்சுகள் நகர்ந்தாலும்,
மனதுக்குள் ஒரே படபடப்பு...தவிப்பு...எப்பொழுதும்.
பேசி முடித்து, சிரித்து, ஓய்ந்த பின்,
மௌனமாய்...நீ ,
பார்க்கும் ஒற்றை பார்வையில்
தவித்து போய்விடுகிறேன் நான்.
உரிமையாய் சண்டை போடுகிறாய்..
செல்லமாய் சீண்டி பார்க்கிறாய்..
ஆழமான பார்வைகளால் என் உயிரைக் குடிக்கிறாய்..
நமக்குள் என்ன உறவென்று மட்டும் சொல்லாமல் வதைக்கிறாய்..

வாலிபம் ஒரு முரட்டு குழந்தை..

வாலிபம் ஒரு முரட்டு குழந்தை..
தொடாதே... என்றால்,
எட்டி பிடிக்கும்
சுடும்... என்றால்,
தொட்டு பார்க்க அடம் பிடிக்கும்
ஆடி..,ஓடி..,ஆட்டம் முடிந்து,
அல்லல்பட்டு, அனுபவம் உணர்ந்து,
இறுதியில் தலை சாய்க்க
தாய்மடி தேடும்

Thursday, February 25, 2010

தீண்டல்!!

உடலோடு உடல் பிணையும்
மோகம் எனக்கில்லை,
ஆனாலும்......
வேண்டும் ஒரு தீண்டல்
நீ எனைக் கடக்கும் போது,
உன் மூச்சின் வெப்பம்.

மார்கழி தரிசனம்

முன்பனி விழும் மார்கழி மாதம், அன்பே! நீ வருகிறாய் ஆடையெங்கும் நீர் சொட்ட,
உனைக் கண்ட என்னுள் ஆசை சொட்ட,
இரு கரம் கூப்பி இறைவன் முன் நீ நீற்க,
காதல் வரம் வேண்டி உன்முன் நான் நிற்க,
அங்கு சுகமாய் ஒலிக்கிறது காதல் சுப்ரபாதம்..

உன்னுடன் என் பயணம்..

சில மணி நேரம் தான் உன்னுடன் என் பயணம்.
அதில் நீ தந்த அனுபவம்
என்னுள் என்றும் பசுமையாய்..
குறுகியகால நம் சந்திப்பில்,
என் எண்ணம் முழுவதும் நீயே நிரம்பி வழிகிறாய்...
உன்னுடன் முடியா விட்டாலும்...,
உன் நினைவுகளுடனே தொடர்கிறது
என் ஒவ்வொரு பயணமும்....

Wednesday, February 24, 2010

தோழி!.உனக்கொரு மடல்..

என் உயிர் தோழியே,


நலம்,உன் நலமே விழையும்

உன் தோழி வரையும் மடல்.



பிரியமானவளே,

இனிமையான உன் பேச்சும்,

திவிட்டாத உன் நட்பும்,

என் மனதை விட்டு என்றும் நீங்கா..



குட்டை பாவாடையும்,

ரெட்டை பின்னலுமாய்,

துவங்கிய நம் நட்பு -இன்று

ஆலவிருட்சகமாய்...



சுகமோ..., துக்கமோ..,

பகிர்ந்து கொள்ள தேடும் முதல் உறவு

நட்பு..

ஏனோ..இதுவரை உன் சுகத்தை மட்டுமே

என்னிடம் பகிர்ந்து கொண்டிருக்கிறாய்...

ஒருவேளை....

துக்கத்தின் நிழல் கூட நம் நட்பில்

பட விரும்பவில்லையோ!!!!



இன்று உன் வாழ்வின் மங்கள நாள்..

உன் மனம் கவர்ந்த மணாளனுடன்..

கைகோர்க்கும் இனிய திருநாள்..



சுற்றம் சூழ்ந்திருக்க..,

மனம் குறுகுறுக்க..,

ஓடி ஒளிந்து..,அரை குறை பார்வை பார்த்து,

திக்கி திணறி பேசியதெல்லாம்

இன்றோடு முடிந்தது...

தளிர்விரல் கோர்த்து,காதோரம் ரகசியம் பேச..,

இதோ உன் அத்தான் உன் அருகில்..



உன் திருமண பரிசாய்..

என் கவிதை கேட்டாய்..

நம் நட்பை கவிதையாய் வரைய..

நான் ஒன்றும் கள்ளிக்காட்டு கம்பன் கிடையாது..,

எனவே மடலாய் அனுப்புகிறேன்..



உன் திருமண அழைப்பிதலுக்கு ,

பதிலாய் எனது நட்பிதலை நான் அனுப்ப,

அதைக் கண்டு நீ இதழ் மொட்டவிழ்க்க,

முத்துக்களை சிந்திய உன் குறுநகையில்,

பொன்நகையும் பொலிவிழக்க,

வானவில் கன்னத்தில் கோலமிட..,

இமைகள் சிறகடிக்க,

இதயம் படபடக்க,

உறவுகள் இணையும் உன்னத பொழுதில்,

எங்கோ நின்று ரசிக்க அங்கே நானில்லை..

என் நினைவுகள் மட்டுமே..



சற்று நேரம் அமைதியாய் இரு.,

மௌனம் கலையாதே.,

உன்னை மலரென சுற்றி வரும்

வண்டுகள் ஏமாந்துவிட போகின்றன..



புரியாமல் இமையடித்து பார்த்தாய்..

பட்டாம்பூச்சி தோற்றது என்றேன்..

வெட்கம் என்று முகம் மூடி கொண்டாய்..



நீ என்றதும் நினைவில் வருவது

உன் புன்னகை பூமுகம் தானடி..

இன்று தவழும் இந்த புன்னகை,

என்றும் நிலைத்திருக்கட்டும் உன் வாழ்வில்..



இல்லறம் எனும் கோவிலில்,

இதயம் எனும் அகல்விளக்கில்,

அன்பு எனும் நெய் விட்டு,

மகிழ்ச்சி எனும் ஒளியேற்ற,

மணவாழ்வில் அடியெடுத்து வைக்கும்

என் இனிய தோழிக்கு,

என் மனமார்ந்த வாழ்த்துகள் ...

உன்னிடம் மட்டும்..

கண்களில் மின்னல்....


இதயத்தில் படபடப்பு ..,

எல்லாம் உன்னை பார்க்கும் போது மட்டும் தான்...

இதழ்களில் மௌனம் ..,

கண்களில் கவியரங்கம்..,

எல்லாம் உன்னிடம் பேசும் போது மட்டும் தான்...,

ஊரே கேட்க உரக்க பேசுபவள்...

உன்னிடம் மட்டும் ஊமையாய் போகிறேன்...

அருகில் நீயின்றி...

கடற்கரை மணல்...


தாவி வரும் அலை...

பௌர்ணமி நிலவு..

இதமான மெல்லிசை...

சுகமான தென்றல்...

எதையும் ரசிக்க மனமில்லை...

அருகில் நீயின்றி...

உறவு....

எத்தனை எத்தனை உறவுகள்...,


எத்தனை எத்தனை நட்புகள்..,

அத்துடன் பகையும்...

ஒரு உறவை தேடி நாம் சென்றால்...

இன்னொரு உறவு பகையாகிறது....

எல்லா உறவும் உறவே என்று உறவாட யாரும் இல்லை...

நட்பை கூட நாக்கை கடித்து கொண்டு சொல்ல வேண்டியிருக்கிறது...

உறவுக்குள் உண்மையில்லை...

போலியான முகங்கள்...போலியான சிரிப்புகள்...

யாதும் ஊரே யாவரும் கேளிர்...

உண்மையை உணர யாருக்கும் மனமில்லை...

தவிப்பு

தூரத்தில் நீ இருக்கையில் உனக்காக ஏங்கிய இதயம்...

அருகில் நீ வந்ததும் ஆயிரம் மடங்காய் துடிக்கிறது....

கண்ணாடி முன் நின்று பேசிய வார்த்தைகள் எல்லாம்

உ(ன்)னை கண் முன் கண்டதும் கை விட்டு விட

மௌனம் மட்டுமே துணையாகிறது...

வருகிறேன் எனக் கூறிச் செல்கிறாய்...

பாதி வழி சென்று திரும்பி புன்னகைகிறாய்....

குழந்தையாய் அடம் பிடிக்கிறது மனம்... உன்னுடன் செல்ல..

வலிகள்...

வார்த்தைகளில் கத்தி ஏந்தி..,


இதயத்தை குத்திக் கிழிக்கும் உறவுகள்...,

உணர்வுகளை....சல்லடை போட்டு..,

சலித்து பார்க்கும் சுற்றம்...

கண்ணீர் சிந்தும் நிமிடங்களில்...

கை நீட்டி துடைக்க விரல்கள் இல்லை...

சுமைகள் பாரமாய் கணக்கும் போது,

ஆதரவாய் சாய்ந்து கொள்ள தோள்கள் இல்லை...

கடிகார முள்ளோடு...போட்டி போடும்...

இயந்திர மனிதனுக்கு...

இதயத்தின் உணர்வுகளை..வாசிக்க நேரமில்லை...

இதழ் கடித்து..கண்கள் மூடி அழும் போது...,

என் இமை வழியாக வடிவது...

கண்ணீர் மட்டுமல்ல...

என் உயிரும்...வார்த்தைகளில் வடிக்க முடியாத வலிகளும் தான்...

என் பிறந்த நாளுக்கு நீ தரும் பரிசில் இல்லை..நம் நட்பு...

துன்பம் வரும் வேலையில்....

எனக்காக நீ ஒதுக்கும் சிலமணித் துளிகளில் தான் இருக்கிறது....

உன் பெயர்...

உள்ளம் ஓராயிரம் முறை கூறினாலும்....


உதடு ஏனோ ஒரு முறை கூறவும் மறுக்கிறது...

உன் பெயர்...

ஆசை!!!

யாருமில்ல சாலையில்...


உன் விரலோடு என் விரல் கோர்த்து நடக்க ஆசை ...,

மஞ்சள் நிற மாலை வேலையில்....

பூமர நிழலில் உன் தோலில் தலை சாய்க்க ஆசை...,

நீ பேசும் வேலையில்....

உன் எதிர் அமர்ந்து இமை மூடாமல் உன் விழி காண ஆசை...,

கலையாத உன் கேசத்தை கலைத்து விட்டு...

என் விரலால் உன் தலை கோத ஆசை...,

உன் இதழ் பதித்த கனியில் நீ அறியா வண்ணம் என் இதழ் பதிக்க ஆசை...

சின்ன சின்ன சண்டை போட்டு உன்னை நான் சீண்டி பார்க்க ஆசை...

கோபம் கொண்ட வேலையில் உன்னிடம் கொஞ்சி பேச ஆசை...,

முடி கொண்ட உன் மார்பில் என் முகம் பதிக்க ஆசை...

மோகம் வந்தால் உன் அங்கம் படர விட ஆசை...

சோகம் வந்தால் உன் மடியில் விழுந்து விட ஆசை...

இன்பமோ துன்பமோ உன்னோடு மட்டும் பகிர்ந்து கொள்ள ஆசை...

எத்தனை பிறவிகள் வரினும்...

உன் உயிரில் என் உயிரும் கலந்து விட ஆசை...

ஏனடி கூற மறுக்கிறாய்?!

உன் வளையல் கொலுசொலி கூறியது...


என் நினைவுகளால்..பறிபோன உன் இரவுகளை...

உன் வீட்டு கண்ணாடி கூறியது...

என் பெயர் சொல்லி...,உன் கண்ணம் சிவந்த நாட்களை...

நீ மட்டும் ஏனடி கூற மறுக்கிறாய்...

என் மேல் உள்ள உன் காதலை...

காத்திருக்கிறேன்...

மேற்கில் சூரியன் மயங்கிய..மஞ்சள் நிற மாலை வேளையில்...


ஓர் அற்புத நாளில்....சந்தித்து கொண்டன நம் விழிகள்..,

சந்தித்த பொழுதுகள் என்னவோ...நிமிடங்கள் தான்....

பார்வையில்...பரிமாறி கொண்டவை ஆயிரம்...

ஒரு நொடி பார்வையில்,ஓராயிரம் கதைகள் பேச ,

உன்னால் மட்டும் எப்படி முடிகிறது....

பார்வையின் தாக்குதல் இருவருள்ளும்...

அன்று இயல்பாய்...பதிந்த உன் உருவம்...ஏனோ..

இதயத்தை விட்டு விலகவே இல்லை...

வளர்பிறையாய் உன் நினைவுகள் என்னுள் மாற..

தேய்பிறையானேன் நான்...

ஏங்கிய பல நாட்கள் நேராத நம் சந்திப்பு...

எதிர்பாராமல் நிகழ்ந்தது மீண்டும்...

இரு ஜோடி விழிகள் பேசிய போதும்...

மொழிகள் பேசும் வாய்ப்பு ஏனோ அமையவில்லை...

தவிப்பாய் பிரிந்தோம்...தனித்தனியே...

மீண்டும் சந்திக்குமா.. நம் விழிகள்...

வழியை நோக்கி காத்திருக்கிறேன்...

ரோஜா மலரே...

என்னாயிற்று உனக்கு...எங்கே உன் வாடிக்கை...


எப்பொழுதும் எனைக் கண்டதும் தலையாட்டி சிரிப்பாயே...

எங்கே அந்த குறுநகை...

எப்பொழுதும் தேன் சொட்டும் உன் இதழ்களில் ,

இன்று சோகம் சொட்டுவதேன்...

என்றும் ஆயிரம் கவிதைகள் பேசும் நீ...

இன்று மௌனம் பேசுவதேன்...

இரவு நேர இனிய சாரலின் துளிகள் மட்டும் உன் மேனியில்...

கலையான உன் தவத்தை கலைத்து விட்ட

காற்றின் மீது கோபமா...இல்லை...

உன் தேனின் சுவையை பருகிவிட்ட வண்டின் மீது கோபமா...

பதில் கூறடி என் ரோஜா மலரே....

குட்டி நிலவு


எங்கள் வீட்டு தோட்டத்தில் மொட்டு ஒன்று மலர்ந்தது...


எங்கள் வானத்தில் நட்சத்திரம் ஒன்று நிலவாக ஜொலிக்கிறது..,

கட்டிலுக்கு பக்கத்தில் தொட்டில் முளைக்கிறது...

உலகில் உள்ள மலர்களின் மென்மை எல்லாம்

ஒன்றாய் சேர்ந்து மழலையாய் பிறந்திடுமோ...

குட்டி நிலவொன்று எங்கள் வீட்டு தொட்டிலில் தவழ்ந்திடுமோ...

சிட்டு குருவியின் அழைப்பில் எங்கள் உலகம் விழித்திடுமோ...

பொக்கைவாய் சிரிப்பில் எங்கள் சொர்க்கம் தெரிந்திடுமோ...

உலகின் மொத்த இன்பங்களை எல்லாம் கொண்டு

எங்கள் தேவதை பிறந்திடுவாளோ....

புன்னகை..


அழகாய் தான் இருந்தாய்...


மெல்ல தலை சாய்த்து ...,

நெற்றி புருவம் உயர்த்தி..,

சின்னதாய் புன்னகைத்த போது..,

நான் தான் உடைந்து விட்டேன்...

நினைவு

மறக்க நினைக்கும்

ஒவ்வொரு நொடியும்

மறந்தே போகிறேன்....

உன்னை மறப்பதற்கு....

கவிதை எழுத வேண்டுமா....

கவிதை எழுத வேண்டுமா....

கம்ப சூத்திரம் பயில வேண்டாம்....கடவுள் அருளும் வேண்டம்...

காதல் செய்...கன்னியை அல்ல...உன்னை...

உன்னை நீ நேசி...

இயற்கையின் மீது காதல் கொள்...

சிறு புல்லில் முத்துகளை சிதறியுள்ள காலை பனி துளியில்...,

மழை தன் கடைசி துளிகளை சிந்தி விட்ட ஜன்னல் கமபிகளில்..,

மெதுவாய் எட்டி பார்க்கும் கதிரவனில்...

இல்லாத முகவரியை தேடி அலையும் மேகங்களில்...

சிலருக்கு ஆறுதல்...சிலருக்கு கவிதை...சிலருக்கு புன்னகை..சிலருக்கு

சந்தோஷம்...

இப்படி எல்லாவற்றையும் கொடுத்து வலம் வரும் அந்த வெண்ணிலவில்...காதல் கொள்...

புதிதாய் பூத்த மலரை கண்டால் புன்னகை சிந்து...

தினமும் உன் வீட்டு தொட்டி செடியின் நலம் கேள்....

குமரி பெண்ணின் வெட்கம் ரசி...

குழந்தையின் மழலை சொல் கேள்...

அறிமுகமில்லா நபரிடம் அன்பு கொள்...

கார்மேகம் பன்னீர் தெளித்தால்...

கருப்புக்கொடி காட்டாதே...

மாலை நேரம் நடை பழக..

நிலா தோழியின் கை கோர்த்து கொள்...

வாழ்கையின் ஒவ்வொரு நிமிடத்தையும் வாழ்ந்து பார்...

கவிதை உன் வீட்டு செடியிலும் பூக்கும்...