Wednesday, February 24, 2010

கவிதை எழுத வேண்டுமா....

கவிதை எழுத வேண்டுமா....

கம்ப சூத்திரம் பயில வேண்டாம்....கடவுள் அருளும் வேண்டம்...

காதல் செய்...கன்னியை அல்ல...உன்னை...

உன்னை நீ நேசி...

இயற்கையின் மீது காதல் கொள்...

சிறு புல்லில் முத்துகளை சிதறியுள்ள காலை பனி துளியில்...,

மழை தன் கடைசி துளிகளை சிந்தி விட்ட ஜன்னல் கமபிகளில்..,

மெதுவாய் எட்டி பார்க்கும் கதிரவனில்...

இல்லாத முகவரியை தேடி அலையும் மேகங்களில்...

சிலருக்கு ஆறுதல்...சிலருக்கு கவிதை...சிலருக்கு புன்னகை..சிலருக்கு

சந்தோஷம்...

இப்படி எல்லாவற்றையும் கொடுத்து வலம் வரும் அந்த வெண்ணிலவில்...காதல் கொள்...

புதிதாய் பூத்த மலரை கண்டால் புன்னகை சிந்து...

தினமும் உன் வீட்டு தொட்டி செடியின் நலம் கேள்....

குமரி பெண்ணின் வெட்கம் ரசி...

குழந்தையின் மழலை சொல் கேள்...

அறிமுகமில்லா நபரிடம் அன்பு கொள்...

கார்மேகம் பன்னீர் தெளித்தால்...

கருப்புக்கொடி காட்டாதே...

மாலை நேரம் நடை பழக..

நிலா தோழியின் கை கோர்த்து கொள்...

வாழ்கையின் ஒவ்வொரு நிமிடத்தையும் வாழ்ந்து பார்...

கவிதை உன் வீட்டு செடியிலும் பூக்கும்...

No comments:

Post a Comment