Wednesday, February 24, 2010

தோழி!.உனக்கொரு மடல்..

என் உயிர் தோழியே,


நலம்,உன் நலமே விழையும்

உன் தோழி வரையும் மடல்.



பிரியமானவளே,

இனிமையான உன் பேச்சும்,

திவிட்டாத உன் நட்பும்,

என் மனதை விட்டு என்றும் நீங்கா..



குட்டை பாவாடையும்,

ரெட்டை பின்னலுமாய்,

துவங்கிய நம் நட்பு -இன்று

ஆலவிருட்சகமாய்...



சுகமோ..., துக்கமோ..,

பகிர்ந்து கொள்ள தேடும் முதல் உறவு

நட்பு..

ஏனோ..இதுவரை உன் சுகத்தை மட்டுமே

என்னிடம் பகிர்ந்து கொண்டிருக்கிறாய்...

ஒருவேளை....

துக்கத்தின் நிழல் கூட நம் நட்பில்

பட விரும்பவில்லையோ!!!!



இன்று உன் வாழ்வின் மங்கள நாள்..

உன் மனம் கவர்ந்த மணாளனுடன்..

கைகோர்க்கும் இனிய திருநாள்..



சுற்றம் சூழ்ந்திருக்க..,

மனம் குறுகுறுக்க..,

ஓடி ஒளிந்து..,அரை குறை பார்வை பார்த்து,

திக்கி திணறி பேசியதெல்லாம்

இன்றோடு முடிந்தது...

தளிர்விரல் கோர்த்து,காதோரம் ரகசியம் பேச..,

இதோ உன் அத்தான் உன் அருகில்..



உன் திருமண பரிசாய்..

என் கவிதை கேட்டாய்..

நம் நட்பை கவிதையாய் வரைய..

நான் ஒன்றும் கள்ளிக்காட்டு கம்பன் கிடையாது..,

எனவே மடலாய் அனுப்புகிறேன்..



உன் திருமண அழைப்பிதலுக்கு ,

பதிலாய் எனது நட்பிதலை நான் அனுப்ப,

அதைக் கண்டு நீ இதழ் மொட்டவிழ்க்க,

முத்துக்களை சிந்திய உன் குறுநகையில்,

பொன்நகையும் பொலிவிழக்க,

வானவில் கன்னத்தில் கோலமிட..,

இமைகள் சிறகடிக்க,

இதயம் படபடக்க,

உறவுகள் இணையும் உன்னத பொழுதில்,

எங்கோ நின்று ரசிக்க அங்கே நானில்லை..

என் நினைவுகள் மட்டுமே..



சற்று நேரம் அமைதியாய் இரு.,

மௌனம் கலையாதே.,

உன்னை மலரென சுற்றி வரும்

வண்டுகள் ஏமாந்துவிட போகின்றன..



புரியாமல் இமையடித்து பார்த்தாய்..

பட்டாம்பூச்சி தோற்றது என்றேன்..

வெட்கம் என்று முகம் மூடி கொண்டாய்..



நீ என்றதும் நினைவில் வருவது

உன் புன்னகை பூமுகம் தானடி..

இன்று தவழும் இந்த புன்னகை,

என்றும் நிலைத்திருக்கட்டும் உன் வாழ்வில்..



இல்லறம் எனும் கோவிலில்,

இதயம் எனும் அகல்விளக்கில்,

அன்பு எனும் நெய் விட்டு,

மகிழ்ச்சி எனும் ஒளியேற்ற,

மணவாழ்வில் அடியெடுத்து வைக்கும்

என் இனிய தோழிக்கு,

என் மனமார்ந்த வாழ்த்துகள் ...

2 comments:

  1. சகோத‌ரிக்கு வாழ்த்துக்க‌ள் !!!
    அருமையான‌ க‌விதை ..

    ReplyDelete