Tuesday, November 16, 2010

இதை விட ஒரு அவமானம் இந்தியாவிற்கு வேண்டாம்...

செய்தி :
காமன்வெல்த் போட்டிக்கு இன்னொரு பின்னடைவு. ஜவஹர்லால் நேரு மைதானத்துக்கு வெளியே கட்டப்பட்டு வந்த நடை மேம்பாலம் நேற்று திடீரென இடிந்து விழுந்தது. இதில், 27 கட்டுமான தொழிலாளர்கள் காயமடைந்தனர். இவர்களில் 5 பேர் ஆபத்தான நிலையில் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

டில்லியில் காமன்வெல்த் போட்டி வரும் அக்டோபரில்(3-14) நடக்கிறது. இதற்கான மைதானங்கள் கட்டுவது உள்ளிட்ட பல்வேறு பணிகளில் கோடிக்கணக்கில் ஊழல் நடந்து உள்ளது. தரமற்ற பொருட்கள் பயன்படுத்துவதால், போட்டிக்கான கட்டடங்களின் நிலைமை பரிதாபமாக உள்ளது. உதாரணமாக மிக முக்கியமான ஜவஹர்லால் நேரு மைதானத்தின் மேற்கூரைப்பகுதி நேற்று முன் தினம் இடிந்ததில், துணை கமிஷனர் உள்ளிட்ட இரண்டு போலீசார் காயமடைந்தனர். இதன் தொடர்ச்சியாக நேற்று இம்மைதானத்தின் வெளியே கட்டப்பட்டு வந்த நடை மேம்பாலம் மாலை 3.10 மணிக்கு திடீரென இடிந்து விழுந்தது. இதில் 27 பேர் காயமடைந்தனர்.

விசாரணைக்கு உத்தரவு: சுமார் 95 மீட்டர் நீளம் கொண்ட இந்த தொங்கு நடை @மம் பாலம், மைதானத்தின் "பார்க்கிங்' பகுதி மற்றும் தெற்கு டில்லியின் சாலையை இணைக்கும் வகையில் கட்டப்பட்டு வந்தது. இதனை ரூ. 10.5 கோடி செலவில் சண்டிகரை சேர்ந்த பி.என்.ஆர்., இன்பிரா என்ற நிறுவனம் கட்டி வருகிறது. டில்லி அரசின் பொதுப்பணித் துறை தான், ஒப்பந்தத்தை பி.என்.ஆர்., நிறுவனத்துக்கு அளித்தது. தற்போதைய விபத்தை தொடர்ந்து, பொதுப்பணித்துறை விரிவான விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.

விபத்து எப்படி?:  மேம்பால விபத்து குறித்து பல்வேறு விதமான கருத்துக்கள் நிலவுகின்றன. ஒருபகுதியில் "கான்கிரிட்' கலவை பூசும் போது, பாலம் இடிந்து விழுந்ததாக, தீயணைப்புத்துறையினர் தெரிவித்தனர். டில்லி பொதுப்பணித்துறை அமைச்சர் ராஜ் குமார் கூறுகையில்,""தொழிலாளர்கள் ஒரே இடத்தில் "கான்கிரிட்டை' கொட்டியதால் விபத்து ஏற்பட்டது. போட்டி துவங்குவதற்கு முன் பாலத்தை சரி செய்து விடுவாம்,''என்றார். (அப்போ  ஒரு கான்கிரிட் கலவையை  தாங்குற சக்தி கூட நீங்க கட்டின பாலத்திற்கு இல்லைன்னு ஒத்துக்குறீங்க... )

மழை காரணம்: மத்திய அமைச்சர் ஜெய்பால் ரெட்டி கூறுகையில்,""கடந்த 20 நாட்களாக டில்லியில் பெய்த மழை காரணமாக பாலம் இடிந்திருக்கலாம்,''என்றார்.
இக்கருத்தை பொதுப்பணி துறை இன்ஜினியர் ராகேஷ் மிஸ்ரா மறுத்தார். இவர் கூறுகையில்,""மேம்பாலம் இடிந்து விழுந்ததற்கு மழை காரணமல்ல. ஏதோ தவறு நடந்திருக்கிறது. இது பற்றி அனைத்து கோணங்களிலும் விசாரித்து வருகிறோம். இதனால், காமன்வெல்த் போட்டிக்கு பின்னடைவு ஏற்பட்டு உள்ளது உண்மை தான் ,''என்றார். ( என்னத்த சொல்ல ....)

அசுத்தமான விளையாட்டு கிராமம் : காமன்வெல்த் போட்டியில் பங்கேற்கும் 8 ஆயிரம் வீரர், வீராங்கனைகள் தங்குவதற்காக கட்டப்பட்டுள்ள விளையாட்டு கிராமம் மிகவும் அசுத்தமாக உள்ளது. இங்கு பணிகள் நிறைவடையவில்லை. ரூம்களின் கதவுகள் திறந்து கிடக்கின்றன. மெத்தையில் தெரு நாய் உறங்குகிறதாம். கழிப்பறைகள் துர்நாற்றம் அடிக்கிறதாம். இதனால் நியூசிலாந்து, கனடா, ஸ்காட்லாந்து உள்ளிட்ட நாடுகள் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளன. இங்கு வாழ்வதற்கு தகுதியற்ற நிலை காணப்படுவதால், தங்குவதற்கு ஓட்டல் ஏற்பாடு செய்யும்படி வலியுறுத்தியுள்ளன. இது குறித்து காமன்வெல்த் விளையாட்டு கூட்டமைப்பின் தலைவர் மைக்கேல் பெனல், கேபினட் செயலர் சந்திரசேகருக்கு கடிதம் அனுப்பியுள்ளார். 24 மணி நேரத்துக்குள் சரி செய்யும்படி கெடு விதித்துள்ளார்.
இது குறித்து ஒருங்கிணைப்பு கமிட்டியின் செய்தி தொடர்பாளர் லலித் பனோட் கூறுகையில்,""அவமானப்பட வேண்டிய அளவுக்கு பெரிய விஷயம் இல்லை. சுத்தப் படுத்தும் பணியை துவக்கி விட்டோம். இன்னும் 36 மணி நேரத்தில் பணிகள் முடிந்து விடும்,''என்றார்.


விலகினார்  சாமுவேல்ஸ் :பாதுகாப்பு மற்றும் சுகாதார பிரச்னை காரணமாக டில்லி காமன்வெல்த் போட்டியில் இருந்து ஆஸ்திரேலிய வட்டு எறிதல் வீராங்கனை டேனி சாமுவேல்ஸ் விலகியுள்ளார். ஏற்கனவே ஜமைக்காவின் தடகள வீரர்களான உசைன் போல்ட், அசபா பாவல் போன்றோர் விலகியுள்ளனர்.

வெடிமருந்துடன் ஆஸி., நிருபர் : காமன்வெல்த் போட்டிக் கான பாதுகாப்பு ஏற்பாடு மட்டமாக இருப்பதை ஆஸ்திரேலிய "சேனல் 7' குழுவினர் அம்பலப்படுத்தி உள்ளனர். இதன் நிருபர் மைக் டபி, வெடிமருந்து பையுடன் நேரு மைதானத் துக்குள் சென்றுள்ளார். இவரை போலீசார் யாரும் சோதனை செய்யவில்லை யாம்.

No comments:

Post a Comment