Saturday, September 4, 2010

அரசியல் நாகரிகம் என்றால் என்ன விலை..!!

தமிழக அரசியல் தலைவர்கள், தங்கள் மேடைப் பேச்சுக்களில், "அரசியல் நாகரிகம் என்றால் என்ன விலை' என கேட்குமளவுக்கு, அநாகரிக வார்த்தைகள் பேசுவதை, மக்கள் கொஞ்சம் கூட விரும்பவில்லை (அதை பற்றி யார் கவலைபட போகிறார்கள்...). அனுபவமிக்க தலைவர்கள் இதை புரிந்து கொள்ள வேண்டும்.
மூத்த வயதுடைய முதல்வரை, "தீயசக்தி' என, முன்னாள் முதல்வரும், முன்னாள் முதல்வரை, "வாய்தா ராணி' என ஆளுங்கட்சியினரும் பட்டங்களிட்டு வசைபாடுவதை நிறுத்திவிட்டு, ஆட்சியின் குறை நிறைகளை மட்டும் பேசினால் நல்லது.
வெறும் 2,653 வி.ஏ.ஓ., வேலைக்கு, 12 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளது வேதனையளிக்கிறது. வேலை இல்லா திண்டாட்டங்களை ஒழிப்பதே எமது லட்சியமென்று மேடைகளில் தலைவர்கள் முழங்குவதை விட்டு விட்டு, ஒருவருக்கொருவர் பகைமைச் சொற்போர் நடத்தி வருவது, ஆரோக்கியமான அரசியல் தானா என சிந்தித்தால் நல்லது(ம்ம்ம்...அதுக்கு வழியே இல்ல..).

எதிர்வரும் தேர்தலில், எந்த மாதிரியான இலவசங்களைக் கொடுத்தால், அப்பாவி மக்களை மயக்கலாம் என சிந்திப்பதை விட்டு விட்டு, வேலை வாய்ப்பற்ற லட்சக்கணக்கானவர்களுக்கு வேலையை உருவாக்கித் தர யோசித்தால் நல்லது.
"வீட்டில் ஒருவருக்கு வேலை வாய்ப்பை வழங்குறோம்' என எந்தக் கட்சியாவது உறுதி அளித்தால், அக்கட்சியினருக்கு தங்கள் ஓட்டுகளை அள்ளித் தர மக்கள் தயாராக உள்ளனர்.
வேலை வாய்ப்பின்மை ஒன்று தான், நாட்டில் ஏகப்பட்ட பிரச்னைகளுக்கு காரணம் என்பதை, நமது தலைவர்கள் உணர்ந்ததாகத் தெரியவில்லை. எல்லா தலைவர்களுமே இன்று(1-க்கு 4 சொந்த வீடு, சொந்த கல்லூரி, சொந்த நிறுவனம் அப்டீன்னு) தன்னிறைவோடுதான் இருக்கின்றனர்; இனியாவது, மக்களைச் சென்றடைய வேண்டிய உருப்படியான திட்டங்களை, இவர்கள் கொண்டு வர வேண்டும்.

தமிழக முதல்வர் சில நாட்களுக்கு முன், "மதுவிலக்கு கொள்கை மறுபரிசீலனை செய்யப்படும்' என்ற சர வெடியை கொளுத்தி விட்டார். டாஸ்மாக் ஊழியர்கள், எங்கு டாஸ்மாக் கடைகள் மூடப்படுமோ என்ற அச்சத்தில்(அவனுக்கு அவன் பொழப்பு..), தொடர் போராட்டம் என்பதை மாற்றி, ஒரு நாள் போராட்டம் என அறிவித்து அமைதியாயினர்.
"பூரண மது விலக்கு' என குரல் எழுப்பிக் கொண்டிருந்த ராமதாஸ், முதல்வர் அறிக்கை, தனக்கு வெற்றி(?) என கனா கண்டார். எதிர்க்கட்சியான அ.தி.மு.க., தோழமை கட்சியான காங்கிரஸ் போன்றவை, மவுனமாகி விட்டன.

தமிழகத்தை சுற்றியுள்ள ஆந்திரா, கேரளா, கர்நாடகா, புதுச்சேரி போன்ற மாநிலங்களில், மதுக் கடைகள் வெகு ஜோராக நடக்கும்போது, தமிழகத்தில் பூரண மதுவிலக்கு கொள்கையை அமல்படுத்த முடியாது.
டாஸ்மாக் வருமானம் தான், பல இலவச திட்டங்களுக்கு கை கொடுக்கிறது. மக்களுக்கு கிடைக்கும் இலவச திட்டங்களுக்கு தடை ஏற்படுத்துவதன் மூலம் ஆட்சியை கவிழ்க்க வேண்டுமென்ற காழ்ப்புணர்ச்சியோடு செயல்படுபவர்கள் தான், "பூரண மது விலக்கு' என்று அவ்வப்போது குரல் எழுப்புகின்றனர்(வேறென்ன...).

தேர்தலில் அனைத்து அரசியல் கட்சிகளுக்கும், பொதுமக்களின் குறைகள் வெளிவராமல் இருக்க, தாக சாந்தியாக இருக்க போவது, டாஸ்மாக் கடைகளிலிருந்து வரும் தேவாமிர்தம் தான்.
இனி எந்த அரசியல் கட்சி ஆட்சிக்கு வந்தாலும், பூரண மதுவிலக்கு ஒரு கானல் நீர் தான். மொத்தத்தில், சமுதாயச் சீரழிவு, மக்கள் உடல் நலம் எல்லாம், பின் தள்ளப்படுகின்றன.

No comments:

Post a Comment