Tuesday, August 24, 2010

என்ன அநியாயம் இது!!!ஜனங்களே...நல்லா கேளுங்க..

செய்தி:  எம்.பி.,க்களுக்கு மாத அலவன்ஸ் மேலும் உயர்வு : வரியும் கட்ட வேண்டாம் என மத்திய அரசு முடிவு

எம்.பி.,க்கள் தற்போது மாதம் 16 ஆயிரம் ரூபாய் சம்பளம் பெறுகின்றனர்.
"இந்த சம்பளத்தை 80 ஆயிரத்து ஒரு ரூபாயாக உயர்த்த வேண்டும்'(நல்லா note பண்ணிக்கோங்க...)  என,பார்லிமென்ட் கூட்டுக் குழு பரிந்துரை செய்தது.
ஆனால்,அந்த அளவுக்கு உயர்த்தினால்,
மக்களிடையே பெரும் அதிருப்தி உருவாகும் என்பதால்(ஓஓ.....அதை பத்தி கூட கவலை படறாங்களா.. மக்களை விடுங்க..முட்டாள்கள்...இதை பத்தியெல்லாம் கவலை பட மாட்டங்க.. அடுத்த வாரம் "மானாட மயிலாட" நிகழ்ச்சியில யாரு செயிப்பாங்கனு யோசிச்சிட்டு இருப்பாங்க.),தற்போது வாங்குவதை மூன்று மடங்கு அதிகமாக உயர்த்தி, மாதம் 50 ஆயிரம் ரூபாய் என சம்பளம் நிர்ணயிக்கப்பட்டது.இதற்கு மத்திய அமைச்சரவையும் சமீபத்தில் ஒப்புதல் அளித்தது.(அட பாவிங்களா...நாங்க வருசம் முழுசும் ராத்திரி பகலா வேலை செஞ்சாலும் 10% increment குடுக்க மாட்டேனு சொல்றானுக....கேட்டா பொருளாதார நெருக்கடி-னு சொல்றனுக...உங்களுக்கு 300% ???என்ன அநியாயம் இது?) 
 அத்துடன்,தொகுதி மற்றும் அலுவலக அலவன்ஸ்கள் மாதம் தலா 20 ஆயிரம் ரூபாய் என்பது 40 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டது. (இது வேறயா...)

இருந்தாலும்,"இந்த சம்பள உயர்வு போதாது,(அடங்கொக்கா மக்கா...!!) பார்லிமென்ட் கூட்டுக் குழு பரிந்துரைத்தபடி,
80 ஆயிரத்து ஒரு ரூபாயாக எம்.பி.,க்களின் சம்பளத்தை நிர்ணயிக்க வேண்டும்' என வலியுறுத்தி, கடந்த வாரம் ராஷ்டிரிய ஜனதா தளம்,சமாஜ்வாடி மற்றும் ஐக்கிய ஜனதா தளம் எம்.பி.,க்கள் பார்லிமென்டில் அமளியில் ஈடுபட்டனர்.
(இந்த மாதிரி மக்கள் பிரச்சனைக்கும் கொஞ்சம் போராடுங்களேன்..பார்க்கலாம்...)
இதையடுத்து, அந்த கட்சிகளின் தலைவர்களுடன் மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி ஆலோசனை நடத்தினார். (இதுல ஆலோசனை வேறயா....எல்லாம் பேசி வச்சது தானே...)
பின்னர், சம்பள உயர்வு தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
இந்நிலையில் மத்திய அமைச்சரவை கூட்டம், பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் நேற்று நடந்தது. (அவர் பாவம்.. என்ன பண்ணியிருக்க போறாரு..சொன்னதுக்கெல்லாம் தலையாட்டிட்டு... சோனியாம்மா அனுமதி தந்ததும்...சொன்ன இடத்துல Sign பண்ணியிருப்பாரு...)
இந்தக் கூட்டத்தில்,எம்.பி.,க்களின் தொகுதி அலவன்ஸ்(அப்பூடின்னா...என்னாங்கோ....இந்த ஓட்டு போட்டவங்களுக்கு ஏதாவது பண்ணுங்கனு சொல்லி குடுக்கிறதா....)  மற்றும் அலுவலக அலவன்ஸ்களை மாதம் ஒன்றுக்கு தலா 5 ஆயிரம்,
அதாவது இரண்டும் சேர்த்து 10 ஆயிரம் ரூபாய் அதிகரிக்க வகை செய்யும் முன்மொழிவை நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி தாக்கல் செய்தார்.
இதற்கு அமைச்சரவையும் உடனடியாக ஒப்புதல் அளித்தது.(இதுக்கு மட்டும் உடனே குடுத்திருவீங்களே... ) இந்த அலவன்ஸ்களுக்கு வருமான வரிச் சலுகையுண்டு. (இது  வேறயா....)
இதனால்,எம்.பி.,க்கள் இனி மாதம் ஒன்றுக்கு தொகுதி அலவன்சாக 45 ஆயிரம் ரூபாயும்,அலுவலக அலவன்சாக 45 ஆயிரம் ரூபாயும் சேர்த்து 90 ஆயிரம் ரூபாய் அலவன்சாக பெறுவர்.
சம்பளம் 50 ஆயிரம் ரூபாயையும் சேர்த்தால், மாதம் ஒன்றுக்கு 1.40 லட்சம் ரூபாய் பெறுவர். (ஆக மொத்தம் எங்களுக்கு மொட்டை...)
இதுதவிர, வேறு பல சலுகைகளும் உண்டு. (அதுதான் தெரியுமே...நீங்க மட்டுமில்லாம...உங்க குடும்பம்..சொந்தகாரங்க எல்லோரும் எங்க காசுல ஊரு சுத்தலாம்...உங்க அடுத்த தலைமுறைக்கும் இப்பவே எங்ககிட்டயிருந்து சுருட்டி சொத்து சேர்த்து வைக்கலாம்...)

மக்களே,நல்லா கேளுங்க... ஒண்ணுமே பண்ணாம மாசம் ஒரு லட்சத்து நாற்பதாயிரம் சம்பளமாம். நமது வரி பணம் எப்படி வீணாகிறது பார்த்தீர்களா? இது தவிர பல சலுகைகள், அதாவது லஞ்சம், ஊழல் இப்படி. இந்தியா வேகமா முன்னேறிடும். ஐந்து வருடம் பாராளுமன்ற உறுப்பினரா இருந்த போதும், வாழ்க்கைல வேண்டும் அளவுக்கு சம்பாதிச்சிடலாம். எதுக்கு வேலைக்கு போய் கஷ்டபடணும் ...
ஏதோ ஒரு அரசியல் கட்சியில் இணைந்துவிட்டு ,பின்னர் எம்.பி./ எம்.எல் .ஏ ஆகிவிட்டால் பின்னர் வாழ்நாள் எல்லாம் கஷ்டமே இல்லை. பதவியில் இல்லையென்றாலும் சலுகைகளும் பென்ஷனும் இவர்களுக்கு கிடைக்கும். ஆனால் இந்த உயர்வுக்கு இவர்களில் எத்தனை பேர் தகுதியானவர்கள்?
குப்பை கூட்டும் வேலைக்கே பட்டதாரிகளை கேட்கும் நிலையில் ரவுடிசமும் ,கொலை, கொள்ளை ,கள்ளசாராயம், விபசாரம்,கடத்தல், போன்ற சமுக விரோத செயல்களில் வளர்ந்த எம்.பி. கும்பல்களுக்கு இதுபோன்ற ஒரு ஊதிய உயர்வு தேவையா? பெரும்பாலோர் கோடி கோடியாக சொத்து உள்ள "கல்வியாளர்கள்" அல்லது ஊழலில் ஊறி உப்பிய பெருச்சாளிகள்.ஒரு பன்னாட்டு விளையாட்டு விழா ஏற்பாடுகளில் எத்தனை கோடி ஊழல் ! தோண்ட தோண்ட வந்து கொண்டிருக்கிறது.
இவ்வளவு சம்பளமும் சலுகைகளும் பெற்றால் தான் ஒரு எம்.பி. குடும்பம் நடத்த முடியும் என்றால் சாதாரண ஜனங்கள் என்ன செய்வது ? எங்கே போவது.?
பாரத தாயே.. என்னதான் நடக்கிறது இந்த பாரத தேசத்தில்....!

No comments:

Post a Comment