Friday, April 23, 2010

அது ஒரு கனாக் காலம்!!!


பாட புத்தகத்தில் மயிலிறகு வளர்த்த காலம்,


சிட்டுக்குருவிகளாய் கொட்டமடித்து திரிந்த காலம்,

வண்ண வண்ணக் கனவுகளை

வெள்ளைச் சீருடையில் சுமந்து திரிந்த காலம் ,

ஒற்றைக் கொய்யாவை ஆறு பேராய் பகிர்ந்துன்ற காலம்,

வீட்டுபாடம் எழுதமறந்து,அடிவாங்கி அழுதுநின்ற கோலத்தில்கூட ,

நண்பனுடன் நகைச்சுவை பகிர்ந்து கொண்ட காலம்,

தாவணி போட்ட வண்ணத்துபூச்சி ,

முதன் முதலாய் வெட்கம் பூசிய காலம்,
யாருமறியாமல் ரகசிய புன்னகைகள் பரிமாறி கொண்ட காலம் ,

இன்பம், துன்பம்,ரகசியம்,குறும்பு எல்லாவற்றையும் பகிர்ந்து கொண்ட,

வாழ்வின் பசுமையான காலம்...பள்ளி பருவ காலம்!!



பள்ளி எனும் விருட்ஷகத்தில்,

புது மலராய் பூத்துக் குலுங்கியவர்கள், இன்று

வாழ்க்கை, வசதி எனும் காற்றில் தூக்கி எறியப்பட்டு,

உலக உருண்டையில் ஒவ்வொரு மூலையில் சிதறி கிடக்கிறோம்.....

கால வரை அறியாமல்,

காற்று மழை தெரியாமல்,

கண்ணாடிக் கதவிற்குள் கைதியாகி,

வாழ்க்கை சந்தையில் வியாபார பொருளாகி,

முகம் தெரியா நட்பை, இணையத்தில் தேடுகிறோம்

No comments:

Post a Comment