Monday, March 1, 2010

இறைவன் எனும் கலைஞன்

இதயமில்லா மனிதனின்
இயந்திர வாழ்க்கை கண்டு மனதில் புழுக்கம்.
காற்று வரக் கதவை திறந்தேன்..
காற்றோடு கவிதை வந்தது.

இரவு நேர இனிய சாரலில்,
நிலவொளியின் பால் மழையில் நனைந்தது சாலை..

குயில்கள் பாட்டிசைக்க,
கொடிகள் நடனமாட,
செடிகள் தலையாட்டி ரசித்தது,
பூக்கள் புன்னகை சிந்தியது,
இயற்க்கையின் அரங்கேற்றம் கண்டு,
இலைகள் எல்லாம் கைதட்டி பாராட்டியது..

இயற்கைதான் எத்தனை அழகு!!!
ஒவ்வொரு படைப்பிலும் அதிசயம் படைத்த,
இறைவன்தான் எத்தனை மகா கலைஞன்!!

இனி ஒரு பிறவி எனக்கிருந்தால்..
இம்மானுட பிறவி மட்டும் வேண்டாம்..
இயற்க்கை அன்னையின் மடியில்,
ஒரு இலையாய்.. மலராய்..கனியாய்..
பிறக்க வரம் வேண்டுகிறேன்..

No comments:

Post a Comment